Skip to main content

Posts

Featured

அரி சங்கரின் கரப்பான்

Moralistic plays எனப்படும் அற நாடகங்கள் மேலை இலக்கியத்தில் ஒருவகைமையாக எப்போதும் இருந்து வந்திருக்கின்றது. அந்த நாடகங்களின் தொடர்ச்சியாக நவீன இலக்கியத்தில் நாம் டால்ஸ்டாய் போன்றவர்களைக் கருதலாம்.அதற்கு எதிரான போராட்டமாக தாஸ்தோவ்ஸ்கியையும் சொல்லலாம்   ஆனால் அற நாடகங்கள் சமகால இலக்கியத்தில் இடம் பெறக்கூடியவையா? என்பது ஒரு கேள்வி.  குறிப்பாக வலியது பிழைக்கும்  என்கிற கருத்து மேலோங்கி நிற்கிற, முதலாளித்துவம் மட்டுமே ஒற்றைத் தத்துவமாக மிஞ்சி நிற்கிற இவ்வுலகில் தனிமனித அற நாடகங்களுக்கு என்ன மதிப்பிருக்க முடியும்? அவை மதிப்பு மிக்கவை என்று கருதினால் கூட அதை எப்படி இலக்கியமாக்குவது என்பதெல்லாம் சற்று துன்பம் தரக்கூடிய கேள்விகளாகத்தான் இருக்கும். ஆனால் அரிசங்கரின் கரப்பான் நாவல் இந்த தடைகளை சரியாக தாண்டியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இவான் இலோயிச்சின் மரணம் எழுதிய டால்ஸ்டாய் மட்டுமல்லாமல் ஒரு கிறிஸ்துமஸ் கீர்த்தனை குறுநாவலை எழுதிய சார்லஸ் டிக்கன்சையும் நினைவுபடுத்துகின்ற இந்த நாவல் ஒரே அமர்வில் வாசிக்க கூடிய அளவுக்கு வேகமாகவும் அதே சமயம் நிதானமாக யோசிக்க வைக்க கூடிய அளவுக்...

Latest posts