Skip to main content

Posts

Featured

    நாவல் நடை. நான் சிறுத்தை நடை என்கிற ஒரு சிறுகதையை, தேயிலைத் தோட்டப் பின்னணியில் எழுதினேன்.அப்போது இலங்கையிலிருந்து ஒரு வாசகர் இலங்கையில் காப்பித் தோட்டங்கள்,மற்றும் அவற்றின் வீழ்ச்சியின் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நாவல் பற்றிக் கூறினார். Christine Frances Spittle Wilson 1957 ல் எழுதிய இந்த மூல ஆங்கில நாவல் கிடைப்பதில் சிரமம் இருந்தது.மொழிபெயர்ப்பு மட்டுமே கிடைத்தது.இலங்கையைச் சேர்ந்த இரா சடகோபன் சரளமாக மொழிபெயர்த்துள்ளார். நாவல் என்று சொன்னாலும் இதில் வருகின்ற பலர் சரித்திரக் கதாபாத்திரங்கள். இலங்கையின் சரித்திரத்தில் முக்கிய பங்கு ஆற்றியவர்கள். Out of Africa,Gone with the wind இரண்டையும் நினைவுபடுத்துகிற நாவல்.அவற்றைப் போல ஒரு காலகட்டத்துக்குள் தங்களைக் கவர்ந்திழுத்திக்கொள்ளும் நாவல் கூட.காப்பித் தோட்டங்களின் வளர்ச்சி,தேய்வுடன் தனி மனிதர்களின் விடா முயற்சி, நம்பிக்கை இழப்பு,மீட்டெடுப்பு,ஆண் பெண் உறவுகளுக்கிடையான சிக்கல்கள்,இனங்களுக்கிடையேயான சிக்கல்கள்,இயற்கையுடனான மனிதனின் நீண்ட போராட்டம் எல்லாவற்றையும் பேசும் ஒரு செவ்வியல் நாவல் இது. செவ்வியல் படைப்புகளின் தன்மைகளுள் ஒன்று நாம்

Latest posts